சிறுவாபுரியில் மகா அலங்காரத்தில் அருள்பாலித்த பாலசுப்பிரமணியர்.. திரளான பக்தர்கள் தரிசனம்


சிறுவாபுரியில் மகா அலங்காரத்தில் அருள்பாலித்த பாலசுப்பிரமணியர்..  திரளான பக்தர்கள் தரிசனம்
x

சிறுவாபுரியில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்களின் ஒரு பகுதி.

கார்த்திகை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்களான வீடு, மனை, வேலை வாய்ப்பு, திருமணம், பிள்ளைப்பேறு உள்ளிட்டவை நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இக்கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை, விடுமுறை தினங்கள் மற்றும் முக்கிய விசேஷே நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.

அவ்வகையில் கார்த்திகை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் இன்று விடியற்காலை முதலே ஏராளமான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.

செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், ஜவ்வாது, இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதன்பின்னர், மகா அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

1 More update

Next Story