சிவகங்கை: குன்னத்தூர் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர்பவனி

தேர்பவனியின் போது தங்கள் வீடுகள் தோறும் இறைமக்கள் சாம்பிராணி தூபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம், குன்னத்தூர் பங்கு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் குடும்ப விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த திங்கள்கிழமை செப மாலை, புகழ் மாலை, கொடியேற்றம், திருப்பலியுடன் விழா ஆரம்பமானது. நவநாள் திருப்பலியைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை இரவு திருவிழா திருப்பலி மற்றும் புனிதரின் தேர்பவனி நடைபெற்றது.
மலர் மற்றும் மின் அலங்காரத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் சவேரியார் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மக்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான மக்கள் பங்கேற்று தேர் இழுத்து வழிபட்டனர்.
தேர்பவனியின் போது தங்கள் வீடுகள் தோறும் இறைமக்கள் சாம்பிராணி தூபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர். முடிவில் நற்கருணை ஆராதனை விழா நடைபெற்று. இன்று மாலை கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.






