கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா


கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப்பெருமானுக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஏகாட்சர மகா கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜையும் அதைத் தொடர்ந்து அபிஷேகமும் பின்னர் அலங்கார தீபாராதனையும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும் நடந்தது. இதேபோல் இரவு யாகசாலை பூஜையும் அலங்கார தீபாராதனையும் பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது.

10-ம் நாள் திருவிழாவான இன்று காலையில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி இன்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. எண்ணெய், பால், மஞ்சள் பொடி, மாவு பொடி, தயிர், சந்தனம், களபம், விபூதி, இளநீர், பன்னீர், எலுமிச்சை சாறு, கரும்பு சாறு, தேன், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அலங்கார தீபாராதனையும் அன்னதானமும் நடந்தது.

இரவு 7 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் விநாயகருக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபடுகின்றனர

நாளை (வியாழக்கிழமை) காலையில் விவேகானந்தபுரம் கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

1 More update

Next Story