ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் திருடியவர் கைது

ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் திருடியவர் கைது
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் சாமியப்பா நகரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ரூ.1 லட்சம் திருட்டு போன சம்பவம் தொடர்பாகவும், மேலும் அதனருகே உள்ள காய்கறி கடை, மளிகை கடை, ரேஷன் கடை ஆகியவற்றில் திருட்டு முயற்சி தொடர்பாகவும் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அந்த சம்பவங்களில் ஈடுபட்டது கல்பாடியை சேர்ந்த முத்துசாமி (வயது 50) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முத்துசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே முத்துசாமி திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து சமீபத்தில் தான் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com