ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை நேற்று கடும் வீழ்ச்சியடைந்தது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை நேற்று கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டமடைந்தனர். இந்நிலையில், இன்று இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 130 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 22 ஆயிரத்து 293 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 375 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 73 ஆயிரத்து 515 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
227 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 170 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 77 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 155 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 10 ஆயிரத்து 925 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 320 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 481 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.






