சென்னை விமானத்தில் 1½ கிலோ தங்கம் சிக்கியது; 3 வாலிபர்கள் கைது

சென்னை விமானத்தில் லேப்டாப்களில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
சென்னை விமானத்தில் 1½ கிலோ தங்கம் சிக்கியது; 3 வாலிபர்கள் கைது
Published on

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து வந்து விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்ததில், சென்னையை சேர்ந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், உடமைகளை சோதனை செய்தனர். அதில், லேப்டாப்களில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதேபோல் 2 ஐபோன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன. ரூ.73 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 466 கிராம் தங்கம், செல்போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து, யாருக்காக தங்க கட்டிகளை கடத்தி வந்தனர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com