ஒரே இடத்தில் 3 மலைப்பாம்புகள் பிடிபட்டன

ஒரே இடத்தில் 3 மலைப்பாம்புகள் பிடிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது
ஒரே இடத்தில் 3 மலைப்பாம்புகள் பிடிபட்டன
Published on

அன்னவாசல்

அன்னவாசல் அருகே உள்ள விசலூர் விஷலி கண்மாய் புதுக்குளக்கரையில் 3 மலைப்பாம்புகள் சுற்றித் திரிவதாகவும், அதனை பிடிக்கக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேர போராடி 3 மலைப்பாம்புகளையும் பிடித்து சாக்குப்பையில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த 3 மலைப்பாம்புகளையும் வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் கொண்டு சென்று விட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com