பெண்ணை தாக்கி 8 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு

பூம்புகார் அருகே பெண்ணை தாக்கி 8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணை தாக்கி 8 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு
Published on

திருவெண்காடு,

நாகை மாவட்டம், பூம்புகார் அருகே வானகிரி மீனவர் காலனியை சேர்ந்த ரெங்கசாமி. இவருடைய மனைவி ராமாயி (வயது 54). இவர், நேற்று அதிகாலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், தான் மறைத்து வைத்து இருந்த இரும்பு கம்பியால் ராமாயியை தாக்கிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்து சென்றார்.

வலைவீச்சு

இதில் காயம் அடைந்த ராமாயியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் பூம்புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கி 8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com