தென்காசியில் மேலும் 287 பேருக்கு கொரோனா

தென்காசியில் மேலும் 287 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தென்காசியில் மேலும் 287 பேருக்கு கொரோனா
Published on

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று கொரோனா பரவல் மேலும் அதிகரித்து உள்ளது. ஒரே நாளில் 287 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 931 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 1,202 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் கடந்த 17-ந் தேதி நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com