ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-க்கு விற்பனை

கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-க்கு விற்பனை ஆகிறது. டீசல் விலையும் சதம் அடித்தது.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-க்கு விற்பனை
Published on

கொடைக்கானல்:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக உள்ளது. அதன்படி தமிழகத்திலும் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.32 காசுக்கு நேற்று காலை விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் ஸ்பீடு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.113.02 காசுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.100.01-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் வாகன ஓட்டிகள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.

எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்திலேயே முதன் முறையாக கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-க்கு விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com