பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக்கோரி அறந்தாங்கியில், பெற்றோர்–மாணவர்கள் சாலைமறியல்

அறந்தாங்கி அருகே எருக்கலாக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 122 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக்கோரி அறந்தாங்கியில், பெற்றோர்–மாணவர்கள் சாலைமறியல்
Published on

அறந்தாங்கி,

இவர்களுக்கு பாடம் எடுக்க 5 ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில், இங்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் பணியில் உள்ளார். அந்த ஒரு ஆசிரியரும் சரியான முறையில் பள்ளிக்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால், மாணவர்களின் பெற்றோர்கள், இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கும், அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் போதிய ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவர்கள், அவர்களின் பெற்றோர் நேற்று அறந்தாங்கிபட்டுக்கோட்டை சாலையில் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

=============

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com