

கள்ளக்குறிச்சி,
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க. சார்பில் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாநில வன்னியர் சங்க துணை தலைவர் நாராயணன், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் கிருஷ்ணன், வன்னியர் சங்க துணை தலைவர் வேலு, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சக்திவேல், நிர்வாகி சரவணன், ஒன்றிய செயலாளர் அன்பரசு, நகர செயலாளர்கள் கராத்தே மணி, மாரி, மாவட்ட துணைச் செயலாளர் ஏழுமலை, வடக்கநந்தல் நகர செயலாளர் மணி, பிரபு, சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பா.ம.க.வினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இருப்பினும் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் சங்கராபுரம் பெரியார் சிலை அருகில் பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் பப்லு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.