பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு

பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு
பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு
Published on

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு சி.எச்.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் சமீம் (வயது 59). இவர் அணிமூர் அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பணிமுடிந்து அணிமூர் மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் சமீம் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அவர் திருச்செங்கோடு ரூரல் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com