

பரமத்திவேலூர்:
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாமக்கல் விற்பனை குழுவிலுள்ள பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுகமாக ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்த ஏலத்துக்கு பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 588 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.28-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18-க்கும், சராசரியாக ரூ.27-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 309-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு ஆயிரத்து 783 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.28.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.28-க்கும், சராசரியாக ரூ.28.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.50 ஆயிரத்து 793-க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை விட தேங்காய் விலை உயர்ந்ததால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.