100 நாள் வேலை திட்ட கணக்குகளை கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட கணக்குகளை கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
100 நாள் வேலை திட்ட கணக்குகளை கலெக்டர் ஆய்வு
Published on

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை மாவட்ட அளவிலான உயர்மட்டக் கூட்டம் கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் ஆலங்காயம், ஜோலார்பேட்டை, கந்திலி, மாதனூர். நாடட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் 2013-2014 ஆம் ஆண்டு முதல் 2019-2020-ஆம் ஆண்டு முடிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வளர்ச்சி பணிகளின் சமூக தணிக்கை அறிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பதிவேடுகள் அனைத்தும் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். ஊராட்சிகளில் குப்பைகளை அகறற்றிட நடவடிக்கை எடுத்து, தரம்பிரிக்கும் பணிகளை முறையாக செய்ய ஒன்றிய ஆணையாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

திட்ட இயக்குநர் செல்வராசு, உதவிஇயக்குநர் (தணிக்கை) மு.பிச்சாணடி, உதவி திட்ட அலுவலர் விஜயகுமாரி, திருமால் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com