கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மாயம் காவலாளி மீது வழக்குப்பதிவு

கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மாயம் காவலாளி மீது வழக்குப்பதிவு

சங்கரன்கோவிலில் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மாயம் காவலாளி மீது வழக்குப்பதிவு
Published on

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் தவிடன். இவர் தனது 3 ஆயிரம் நெல் மூட்டைகளை, சங்கரன்கோவில் கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து, அதற்கு ஈடாக பயிர்க்கடன் பெற்றுள்ளார். பயிர்க்கடன் பெறுவதற்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காஜாஷெரீப் உதவி செய்ததாக தெரிகிறது. இதற்கிடையே கூட்டுறவு வங்கியில் இருந்த நெல் மூட்டைகளில் 1,083 மூட்டைகள் காணாமல் போனது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வங்கியின் காவலாளி செல்வத்திடம், காஜா ஷெரீப் கேட்டார். அதற்கு அவர் சரவர பதில் கூறவில்லை. இது தொடர்பாக சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு உத்தரவின்படி, நெல் மூட்டைகள் காணாமல் போனது தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வங்கி காவலாளி செல்வம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com