

மும்பை,
மராட்டியர்களின் புத்தாண்டான குடிபட்வா சனிக்கிழமை கெண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மும்பையில் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படாது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், " சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு இருக்கும். இதேபோல வார விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு இருக்கும். தடுப்பூசி போடும் பணி வரும் 4-ந்தேதி தொடங்கும். பொது மக்கள் மும்பை மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க கேட்டு கொள்கிறோம் " என கூறப்பட்டுள்ளது.