தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
Published on

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

ஒளிராத மின்விளக்குகள்

கிணத்துக்கடவில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவை இரவு நேரத்தில் சரியாக ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் சமூக விரோத செயல்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான மின்விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.

முருகன், கிணத்துக்கடவு.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோவையை அடுத்த ஒண்டிப்புதூர் பட்டணம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன. ஆனால் இந்த சாலையோரம் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு அள்ளப் படாமல் இருக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பிளாஸ்டிக் குப்பைகள் காற்றில் பறந்து குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. எனவே இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணி, ஒண்டிப்புதூர்.

நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

பொள்ளாச்சியில் இருந்து சுல்தான்பேட்டை வழியாக திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் சில பஸ்கள் சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தம் முன்பு நிற்காமல் சில மீட்டர் தொலைவு தள்ளி நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள், முதியவர்கள் ஓடிச் சென்று பஸ் ஏறும் நிலை நீடித்து வருகிறது. சில நேரத்தில் சிலர் கீழே தவறி விழுந்து காயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்த வேண்டும்.

பழனிசாமி, சுல்தான்பேட்டை.

இறைச்சி கழிவுகளால் அவதி

பொள்ளாச்சியில் இருந்து நா.மூ.சுங்கம் செல்லும் வழியில் உள்ள பாலத்தின் மேற்புறமும் |பாலத்தின் கீழேயும் இறைச்சி கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால், அங்கு துர்நாற்றம் வீசுவதால் பாலத்தை கடந்து செல்லும்போது பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள். இதன் காரணமாக நோய் பரவும் அபாய நிலை நீடித்து வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபு, பொள்ளாச்சி.

குப்பைகளால் துர்நாற்றம்

கோவை சாய்பாபா காலனி ஜீவா நகரில் சாலையோரத்தில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அவை முறையாக சுத்தம் செய்யப்படா ததால் அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் காற்று வீசும்போது அந்த குப்பைகள் பறந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் வந்து விழுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகநாதன், சாய்பாபாகாலனி.

உடைந்து கிடக்கும் நடைபாதை

கோவை சாய்பாபாகாலனி காமராஜர் வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இதில் சில இடங்களில் கான்கிரீட் உடைந்த நிலையில் இருப்பதால் அது திறந்த நிலையில் இருக்கிறது. இது நடைபாதையாக இருப்பதால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அத்துடன் சில இடங்களில் ஓட்டை விழுந்து இருப்பதால் அதற்குள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசோக்குமார், கோவை.

வீணாகும் குடிநீர்

கோவை கவுண்டம்பாளையம் மூவர் நகர் பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இருந்தும், குழாய் உடைப்பால் குடிநீர் வீணாக செல்வது வேதனையாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகேசன், கவுண்டம்பாளையம்.

அடிப்படை வசதி வேண்டும்

பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அருகே உள்ள போஸ்டல் காலனியில் தெருவிளக்கு வசதி, சாலை வசதி, குப்பை தொட்டி வசதி உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இங்கு தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாய்ராம், பொள்ளாச்சி.

ஆபத்தான குழி

கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகம் அருகே பஸ்நிறுத்தம் உள்ளது. இதன் அருகே சாலையின் குறுக்கே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதை சரியாக மூடாமல் விட்டதால் அங்கு சாலையில் குழி போன்று காணப்படுவதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இரவில் விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே விபத்தை ஏற்படுத்தும் இந்த குழியை உடனடியாக மூட வேண்டும்.

செல்வின், கோவை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com