நேரடி நெல் கொள்முதல் நிலையம்

மேல்மலையனூர் அருகே வளத்தியில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
Published on

திண்டிவனம்,

மேல்மலையனூர் அருகே வளத்தியில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். வட்டார கல்விக் குழு தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார் வரவேற்றார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்பிரமணியன், செல்வி ராமசரவணன், ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவர் செல்வராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com