குறிஞ்சிப்பாடி பஸ் நிறுத்தத்தில் முதியவர் பிணம் போலீசார் விசாரணை

குறிஞ்சிப்பாடி பஸ் நிறுத்தத்தில் முதியவர் பிணம் போலீசார் விசாரணை
குறிஞ்சிப்பாடி பஸ் நிறுத்தத்தில் முதியவர் பிணம் போலீசார் விசாரணை
Published on

குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி ரெயிலடி பஸ்நிறுத்தம் பகுதியில் 65 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த குறிஞ்சிப்பாடி போலீசார் இறந்து கிடந்த முதியவர் குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை? அவர் வெள்ளை நிறத்தில் நீல நிற கோடு போட்ட சட்டையும், நீல நிற லுங்கியும் அணிந்துள்ளார்.

இதையடுத்து முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து குறிஞ்சிப்பாடி கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com