மோட்டார் சைக்கிள்-சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாகூரில் மோட்டார் சைக்கிள்-சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மோட்டார் சைக்கிள்-சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்
Published on

நாகூர்:

நாகூர் அலங்கார வாசல் எதிரில் பெட்ரோல்,டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாகூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மோட்டார் சைக்கிள் மற்றும் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் நவுசாத் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட துணை தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நாகூர் நகர தலைவர் சர்புதீன் மரைக்காயர் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com