கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க கோழித்தீவனத்தில் நுண்ணூட்ட சத்துக்களை பயன்படுத்தலாம்-ஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தின் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க கோழித்தீவனத்தில் நுண்ணூட்ட சத்துக்களை பயன்படுத்தலாம்-ஆராய்ச்சி நிலையம் தகவல்
Published on

நாமக்கல்:

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று 2 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் மற்றும் 12-ந் தேதி மழை பெய்ய வாய்ப்பில்லை. இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 50, 50, 45, 45 சதவீதமாகவும் இருக்கும்.

நுண்ணூட்ட சத்துக்கள்

கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி மற்றும் நச்சுயிரி நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் தகுந்த கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க தெளிப்பான்களை பயன்படுத்த வேண்டும். மேலும் தீவனத்தில் நுண்ணூட்ட சத்துக்களை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com