

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 469 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 ஆயிரத்து 849 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 803 ஆக உயர்ந்தது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 980 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 254 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 451 பேர் உயிரிழந்துள்ளனர்.