

பெங்களூரு,
சட்டசபையில் பா.ஜனதா உறுப்பினர் பசவராஜ் பொம்மை, அரசு, விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் விவசாய பல்கலைக்கழகங்களில் வறட்சி பாதிப்பில் பயிரிடும் விதைகள் பற்றிய ஆய்வை நடத்துவது இல்லை. விவசாயிகளுக்கு வறட்சி தாங்கும் விதைகள் வழங்குவது இல்லை என கூறினார்.
இதற்கு விவசாயத்துறை மந்திரி கிருஷ்ணபைரே கவுடா பதில் அளித்து பேசுகையில், வறட்சியை தாங்கி வளரும் சோளம், ராகி மற்றும் நிலக்கடலை உள்ளிட்டவைகளை பயிரிட விவசாயிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இது வறட்சியை தாங்குவதுடன், நோய் தாக்குதலுக்கு உள்படாமல் வளரும் திறன் கொண்டவை. வறட்சியை தாங்கி வளரும் வகையில் சில விதைகளின் மரபணுவை மாற்றுவதற்கான ஆய்வை தொடங்கி இருக்கிறோம் என்றார்.