

கிருஷ்ணகிரி:-
கிருஷ்ணகிரி நகராட்சியில் நியமனக்குழு, ஒப்பந்த குழு வரி விதிப்பு மேல்முறையீடு குழு பதவிகளுக்கு கவுன்சிலர்களிடையே மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இந்த பதவிகளுக்கு நகராட்சி தலைவர், துணை தலைவர் தவிர 31 கவுன்சிலர்களும் போட்டியிட முடியும். நேற்று நடைபெற்ற இந்த மறைமுக தேர்தலில் போட்டியில்லாததால் நியமன குழு உறுப்பினராக மீனா, ஒப்பந்த குழு உறுப்பினராக சுனில்குமார், வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்களாக வேலுமணி, மத்தின், ஜோதி, சக்திவேல் முருகன் ஆகிய 6 பேரும் தேர்வானார்கள். தேர்தலை நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான முருகேசன் நடத்தி முடிவுகளை அறிவித்தார். தொடர்ந்து அதற்கான சான்றிதழ்களை கவுன்சிலர்களைவழங்கினார்.