

மதுரை,
மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுஜித் என்ற சோணைமுத்து (வயது 45). கொத்தானார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவர் கர்ப்பிணியானார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப் படையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிந்து அவரை கைது செய்தனர்.
ஜாமீனில் வெளியில் வந்த அவர், அந்த சிறுமியை 2-வதாக திருமணம் செய்து கெண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. 2 மனைவிகளையும், 5 குழந்தைகளையும் தனது பொறுப்பில் பராமரித்து வந்தார். இதற்கிடையே அவர் மீதான சிறுமி பலாத்கார வழக்கு மதுரை மாவட்ட குழந் தைகள் வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலா, விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜான்சிராணி ஆஜரானார்.
விசாரணை முடிவில், சோணைமுத்துவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார்.