

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:
தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு ஜி.எஸ்.டி.சாலை, வாலாஜாபாத்தை அடுத்த புளியம்பாக்கம், காஞ்சீபுரம் கூரம்கேட், கைப்பட்டூர் ராஜீவ் காந்தி சாலை, கேளம்பாக்கம் ராஜீவ்காந்தி சாலை, கண்டிகை மெயின்ரோடு, படப்பை மேயின் ரோடு, மூவரசம்பட்டு கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலை, சூனாம்பேடு, காஞ்சீபுரம்அரக்கோணம் சாலை படுநெல்லி, கேளம்பாக்கத்தை அடுத்த ரத்தினமங்கலம், வெங்கப்பாக்கம், திருக்கழுக்குன்றம் ரோடு நெரும்பூர் பகுதிகளில் தலா ஒரு கடை, கேளம்பாக்கம் பழைய மாமல்லபுரம் சாலையில் 2 கடைகள், குன்றத்தூரில் 2 கடைகள், பல்லாவரத்தில் 2 கடைகள், முடிச்சூரில் 2 கடைகள் என்று 22 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் அரசு உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.