நகரத்திற்கு படையெடுக்கும் குரங்குகள்

நகரத்திற்கு படையெடுக்கும் குரங்குகள்
நகரத்திற்கு படையெடுக்கும் குரங்குகள்
Published on

மலைப்பகுதியில் இருந்து குரங்குகள் தண்ணீர் தேடி நகரங்களுக்கு படையெடுப்பதால், அவற்றின் தாகம் தணிக்க மலைப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கயம் அருகே அமைந்துள்ளது சிவன்மலை, ஊதியூர் மலை. இந்த மலைகளில் பலநூற்றுக்கணக்கான குரங்குகள், மான்கள், உடும்பு, கீரி, முயல், முள்ளம்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

மழைக்காலங்களில் மலையில் ஆங்காங்கே தண்ணீர் குடித்து தாகம் தனித்தும் வருகிறது. இந்த விலங்குகள் வறட்சி காலங்களில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு படையெடுத்து வந்தது. ஆனால் தற்போது கடுமையான வெயில் மற்றும் வறட்சி காரணமான குரங்கு கூட்டங்கள் தண்ணீர் மற்றும் உணவுகளை தேடி தற்போது நகரப்பகுதிகளுக்கும் படையெடுத்து வருகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகள், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தந்து விரட்டி விடுகின்றனர்.

எனவே வனத்துறை அதிகாரிகள் மலைப்பகுதியில் ஆங்காங்கே வன விலங்குகள் குடிப்பதற்காக தண்ணீர் தொட்டிகளை அமைத்து குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் அவற்றில் தண்ணீர் நிரப்பி வந்தால் வன விலங்குகள் நகர, கிராம பகுதிகளுக்கு வருவது தடுக்கப்படும். எனவே தண்ணீர் தொட்டிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com