மேலும் ஒருவர் கைது

மேலும் ஒருவர் கைது
மேலும் ஒருவர் கைது
Published on

திருப்பூர்

திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் வயது 24. இவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த அசோக்குமார் 23 என்பவர் திருப்பூர் சந்திராபுரத்தை சேர்ந்த முருகன் 47 என்பவரின் ஆம்புலன்சை ஓட்டி வருகிறார். அசோக்குமாரும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்சை நிறுத்தி பணியாற்றி வந்தார்.

கடந்த 17-ந் தேதி இரவு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு விக்னேசுக்கும், அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. விக்னேஷ், கல்லால் அசோக்குமாரின் ஆம்புலன்சில் இருந்த குளிர்சாதன பெட்டியை உடைத்ததாக தெரிகிறது. உடனடியாக அசோக்குமார், முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் ஏற்பட்ட தகராறில் விக்னேசை அசோக்குமார் கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர். இந்தநிலையில் கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் முருகனையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com