

புதுச்சேரி,
அரசு பொது மருத்துவமனையில் ஊழியர் நியமன விதிப்படி செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டும், புதிதாக செவிலியர்கள் நியமிக்கப்படாமல் புதிய மருத்துவப் பிரிவுகளை தொடங்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசு செவிலியர் சங்கம் சார்பில் சுகாதாரத்துறை அலுவலகத்துக்குப் பின்புறம் உள்ள செஞ்சி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் சீத்தாராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். துணைத்தலைவர் பாக்கியவாதி கண்டன உரையாற்றினார்.