வழக்கு நடத்துவதாக கூறி பணம் மோசடி இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் மீது தையல் தொழிலாளர்கள் புகார்

களக்காடு புதுத்தெருவில் வசிப்பவர் பிரபாகரன் (60). தையல் தொழிலாளி. இவர் மற்றும் இவரது நண்பர்கள் வள்ளியூரில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர்.
வழக்கு நடத்துவதாக கூறி பணம் மோசடி இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் மீது தையல் தொழிலாளர்கள் புகார்
Published on

களக்காடு,

களக்காடு புதுத்தெருவில் வசிப்பவர் பிரபாகரன் (60). தையல் தொழிலாளி. இவர் மற்றும் இவரது நண்பர்கள் வள்ளியூரில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர். அப்போது அவர்கள் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற் சங்கம் தொடங்கினர். சங்கம் தொடங்கியதற்கு நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் திடீரென கடந்த 2005ம் ஆண்டு பிரபாகரன் உள்பட 73 தொழிலாளர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்தது. இதனையடுத்து நிர்வாகத்திற்கு எதிராக 41 தொழிலாளர்கள் நெல்லை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி, 41 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று ஏற்றுமதி நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் நிர்வாகம் பணி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கடந்த 2008ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தொழிலாளர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை தொழிலாளர்கள் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு நெல்லை மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன் நடத்தினார். வழக்கு செலவுக்காக தொழிலாளர்கள் சேர்ந்து காசி விஸ்வநாதனிடம் ரூ.70 ஆயிரம் வழங்கினார்களாம். இதற்கிடையே அவர் தொடர்ந்து வழக்கை சரிவர நடத்தாமலும், கோர்ட்டில் ஆவணங்களை தாக்கல் செய்யாமலும் மோசடி செய்து விட்டதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி பிரபாகரன் உள்ளிட்ட தையல் தொழிலாளர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனிடம் புகார் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com