எருமப்பட்டி அருகே வாகனம் மோதி முதியவர் பலி

எருமப்பட்டி அருகே வாகனம் மோதி முதியவர் பலி.
எருமப்பட்டி அருகே வாகனம் மோதி முதியவர் பலி
Published on

எருமப்பட்டி,

எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் ஏரிக்கரையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த முதியவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை ஓட்டி வந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com