வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

கயத்தாறு அருகே வாகனம் மோதி ஒருவர் பலியானார்.
Published on

கயத்தாறு:

கயத்தாறு அருகே சவலாப்பேரி கிராமத்தில் நாற்கரச் சாலையில் அதிகாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 55 வயது மதிக்கத்தக்கவர், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நரைத்த தலைமுடியுடன் அவர் வாடாமல்லி கலந்த சிவப்பு கலர் சட்டையும், கைலியும் அணிந்துள்ளார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com