கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; ஊராட்சி மன்ற தலைவர் படுகாயம்

ஒட்டன்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் படுகாயம் அடைந்தார்.
கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; ஊராட்சி மன்ற தலைவர் படுகாயம்
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசப்பிள்ளைபட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சக்திவேல் (வயது 43). இவருக்கு திருமணமாகி ராஜஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் சக்திவேல் நேற்று முன்தினம் அரசப்பிள்ளைபட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த கார் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சக்திவேல் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரசப்பிள்ளைபட்டி பொதுமக்கள் சிலர், மருத்துவமனை முன்பு குவிந்தனர். அப்போது விபத்து ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார், அரசு மருத்துவமனைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விபத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com