பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

பெரம்பலூர்:

தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பா.ம.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அளித்த அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கண்டித்து பெரம்பலூரில் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க.வினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com