பள்ளி மாணவிகள் இளம்வயது திருமணத்தைத் தவிக்க வேண்டும். போலீஸ் அதிகாரி பேச்சு

பள்ளி மாணவிகள் இளம்வயது திருமணத்தைத் தவிக்க வேண்டும், என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரி பசினார்.
பள்ளி மாணவிகள் இளம்வயது திருமணத்தைத் தவிக்க வேண்டும். போலீஸ் அதிகாரி பேச்சு
Published on

ஜோலார்பேட்டை

பள்ளி மாணவிகள் இளம்வயது திருமணத்தைத் தவிக்க வேண்டும், என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரி பசினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு, சைபர் கிரைம், குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

மாணவர்கள் பள்ளி பருவத்தில் கல்வியில் கவனம் செலுத்தி உயர்கல்வி பயின்று நல்ல நிலைக்குச் செல்ல தங்கள் அறிவை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் இளம் வயதில் மது பழக்கம், புகைப்பிடித்தல், போதைப் பொருளுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

வளர் இளம் பெண்கள் இளம் வயதில் இனக்கவர்ச்சி மூலம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனால் சிறுவயதிலேயே திருமணமாகி தங்களின் பிரகாசமான வாழ்க்கையை இழந்து விடுகின்றனர்.

எனவே பள்ளி மாணவிகள் இளம்வயது திருமணத்தைத் தவிர்க்க வேண்டும். செல்போன்களில் கவர்ச்சிக்கரமான விளம்பரங்கள், ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும். பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைவருக்கும் காவல் துறை காவலன் செயலி மூலம் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களுக்கு பரிசு

மேலும் காவலன் செயலி குறித்து செயல்விளக்கம் அளித்தார். விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலளித்த 5 மாணவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பணப் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம், தனிப்பிரிவு ஏட்டு செந்தில்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com