குஞ்சபனை சோதனைச்சாவடியில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.52 ஆயிரம் பறிமுதல்

குஞ்சபனை சோதனைச்சாவடியில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
குஞ்சபனை சோதனைச்சாவடியில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.52 ஆயிரம் பறிமுதல்
Published on

கோத்தகிரி,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பணபட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் நேற்று மாலை, பறக்கும் படை அலுவலர் அய்யப்பன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரில் இருந்த கரூர் மாவட்டம் ஓலப்பாலயத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.52 ஆயிரம் வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் குன்னூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com