செல்போனில் பேசியபடியே நடந்த போது 4–வது மாடியில் இருந்து தவறி விழுந்து மேஸ்திரி பலி

செல்போனில் பேசியபடியே நடந்தார் 4–வது மாடியில் இருந்து தவறி விழுந்து மேஸ்திரி பலி
செல்போனில் பேசியபடியே நடந்த போது 4–வது மாடியில் இருந்து தவறி விழுந்து மேஸ்திரி பலி
Published on

திருவள்ளூர்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டம் எறும்பூரை அடுத்த பனித்திருப்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(வயது 27). கட்டிட மேஸ்திரி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள இருளர்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 4 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டுமான பணியில் கடந்த ஒராண்டாக அங்கேயே தங்கி ஈடுபட்டு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து கட்டிட தொழிலாளர்கள் அனைவரும் தூங்க சென்று விட்டனர். மேஸ்திரி முத்துப்பாண்டி, அந்த கட்டிடத்தின் 4வது மாடியில் செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் 4வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் உடல் சிதறிய அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com