நெய்வேலியில் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

நெய்வேலியில் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டா.
நெய்வேலியில் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
Published on

கடலூர்,

நெய்வேலி 27-வது வட்டம் கிழக்கு வீதி பார்வையாளர் தெருவை சேர்ந்தவர் சிவஞானசாமி. இவருடைய மனைவி கல்யாணி (வயது 78).இவர் வயது மூப்பு காரணமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த அவரது மகன் அன்புசெல்வன் என்.எல்.சி. 2-வது சுரங்கத்திற்கு வேலைக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த கல்யாணி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. சற்று நேரத்தில் அவர் பலியானார்.

இது பற்றி அறிந்ததும் அன்புசெல்வன் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பேலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்து கிடந்த கல்யாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றி அன்புசெல்வன் கொடுத்த புகாரின் பேரில் தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com