வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

நச்சலூரில் மது குடிப்பதை நிறுத்த சொல்லி மனைவி திட்டியதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Published on

நச்சலூர்

கரூர் மாவட்டம், நச்சலூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 38). இவரது மனைவி பிரியா (26). இந்தநிலையில் பாலசுப்பிரமணியனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் தனது கணவரை மது குடிப்பதை நிறுத்த சொல்லி பிரியா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த பாலசுப்பிரமணியன் கடந்த 19-ந்தேதி கோரைகளுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வாயில் நுரை தள்ளியவாறு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ந்தேதி சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து பிரியா கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com