வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேக் உசேன்பேட்டை வீரனார் கோவில் முன்புறம் உள்ள வேப்பமரத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். அதில் இறந்தவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் அய்யப்பன்(வயது 33) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அய்யப்பன் வேலைக்கு செல்லாததால் அவரது மனைவி அனிதா திட்டியதாகவும், இதனால் மனமுடைந்த அய்யப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com