இளம்பெண் தற்கொலை

கடையநல்லூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் தற்கொலை
Published on

கடையநல்லுர்:

கடையநல்லூர் மேல இந்திராநகரை சேர்ந்தவர் நாகமணி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 20). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக நாகமணி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கணவரிடம் கோபித்துக்கொண்டு ராஜேஸ்வரி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஸ்வரிக்கு திருமணம் ஆகி 2 வருடங்களே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com