டெங்கு தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் ஆய்வின்போது கலெக்டர் வேண்டுகோள்

சேலத்தில் டெங்கு தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஆய்வின்போது கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
டெங்கு தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் ஆய்வின்போது கலெக்டர் வேண்டுகோள்
Published on

சேலம்,

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 54ல் உள்ள கோகுலவிலாஸ் பாடக சாலை, சஞ்சீவராயன்பேட்டை, வார்டு எண் 55ல் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, முனியப்பன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று ஆய்வு செய்தார்.

அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் கலெக்டர் சென்று, பொதுமக்கள் தண்ணீர் சேகரித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகள் மற்றும் குடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார். அப்போது சில வீடுகளில் கொசுப்புழுக்கள் இருப்பதை கண்டறிந்த கலெக்டர் ரோகிணி அவற்றை உடனடியாக சுத்தப்படுத்திட, மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் ரோகிணி கூறியதாவது:

பொதுமக்கள் தங்களது வீடுகளை தூய்மையான பகுதிகளாக கருதி, டெங்கு தடுப்பு பணிகளை ஆர்வமுடன் மேற்கொள்ள வேண்டும். வீடுகளுக்குள் டெங்கு தடுப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லையெனில், அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள். இதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் டெங்கு தடுப்பு பணிகளும், உயர் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் தெரிவிக்கும் குறைபாடுகளையும் உடனடியாக சரிசெய்திட, தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி டெங்கு தடுப்பு பணிகள் முழுமைபெறாது என்பதை கருத்தில் கொண்டு தற்போது மேற்கொள்ளும் டெங்கு தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் கணேசன், மாநகர நல அலுவலர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com