புதிய தமிழகம் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
புதிய தமிழகம் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்
Published on

ராமநாதபுரம்,

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். நகர் செயலாளர் சகுபர் முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் மோகன்தாஸ், துணை செயலாளர் நாகராஜ், பொறுப்பாளர் பல்லவராஜா, இணை செயலாளர் அப்துல்அஜீஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நிகழ்ச்சியில், ராமநாதபுரம் காசிமுருகேசன் உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட துணை செயலாளர் ஜெயபாலன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com