மாவட்ட செய்திகள்
விவசாயி கொலை வழக்கில் அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
விவசாயி கொலை வழக்கில் அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சசிதரன் (வயது 45) விவசாயி. இவரது மகள் சினேகா கீராம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி சசிதரன் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி (45), அவரது மகன்கள் விக்னேஸ்வரன் (25) பசுபதி (27) மற்றும் சவுந்தரராஜன் (55), அவரது மகன் லோகேஷ் (22) ஆகிய 5 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் பசுபதி, லோகேஷ், விக்னேஸ்வரன் ஆகிய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

