மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்

மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு மூன்று சக்கர ஸ்கூட்டரை அமைச்சர் காந்தி வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்
Published on

கிருஷ்ணகிரி:-

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மத்தூர் பகுதிக்கு சென்ற போது திம்மராயன், அண்ணாமலை ஆகிய 2 மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் காந்தி, மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்படி 2 மாற்றுத்திறனாளிகளுக்கும் மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலக வளாகத்தில் நடந்தது. அண்ணாமலை, திம்மராயன் ஆகிய 2 பேருக்கும் தனது சொந்த நிதியான ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர ஸ்கூட்டர்களை அமைச்சர் காந்தி வழங்கினார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன், மதியழகன் எம்.எல்.ஏ., கர்நாடக மாநில தி.மு.க. அமைப்பாளர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் சந்திரன், நகர செயலாளர் நவாப், நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரஜினி செல்வம், துணை அமைப்பாளர் செந்தில்குமார், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் அஸ்லாம், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், நகர்மன்ற உறுப்பினர்கள் வேல்மணி, பாலாஜி, சீனிவாசன், சுனில்குமார், பிர்தோஸ்கான், புவனேஸ்வரி, மீனா நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com