மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்
Published on

கடலூர்,

விருத்தாசலம் அருகே கார்கூடல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மணிகண்டன் (வயது 46). இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவித்தொகை மாதம் ரூ.1000 பெற்று வருவதாகவும், அதை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறி, கோஷங்களை எழுப்பினார். இதையடுத்து அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com