நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் மக்காச்சோளம் வந்தது

நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் மக்காச்சோளம் வந்தது
நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் மக்காச்சோளம் வந்தது
Published on

நாமக்கல், ஏப்.8-

நாமக்கல் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் தீவன மூலப்பொருட்கள் வாங்கி வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று ஆந்திர மாநிலத்தில் இருந்து 2,600 டன் மக்காச்சோளம் சரக்கு ரெயிலில் வாங்கி வரப்பட்டது.

இந்த மக்காச்சோள மூட்டைகள் நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து 140 லாரிகளில் ஏற்றப்பட்டு கோழிப்பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com