பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரையில் பெண்ணிடம் நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

மதுரை,

மதுரை புதுஜெயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாரதிதாஸ். இவருடைய மனைவி தீபா (வயது 38). சம்பவத்தன்று இவர், மொபட்டில் மதுரா கோட்ஸ் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள், தீபா அணிந்திருந்த 14 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தீபா அளித்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com