காரிமங்கலம் அருகே ஏரியில் வாலிபர் பிணம்-கொலையா? போலீசார் விசாரணை

காரிமங்கலம் அடுத்த பைசுஅள்ளி ஏரியில் மர்மமான முறையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம் அருகே ஏரியில் வாலிபர் பிணம்-கொலையா? போலீசார் விசாரணை
Published on

காரிமங்கலம்:

காரிமங்கலம் அடுத்த பைசுஅள்ளி ஏரியில் மர்மமான முறையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரியில் வாலிபர் பிணம்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பைசுஅள்ளி ஏரியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காரிமங்கலம் போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்த வாலிபர், அடிலம் ஊராட்சி கூடகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சதீஷ்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது.

பின்னர் இறந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா? போலீசார் விசாரணை

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வாலிபர் சதீஷ்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தததால், அவர் கொலை செய்யப்பட்டரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காரிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com